Thursday, September 22, 2016

உச்சத்துல சிவா - திரைப்பட விமர்சனம்

By With 1 comment:
நேற்று கரண் நடிப்பில் வெளியாகி இருக்கும் உச்சத்துல சிவா திரைப்படம் பார்த்தேன்.நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் கரண் நடித்து வெளிவந்து இருக்கும் திரைப்படம்.கடைசியாக இவர் நடித்த வெற்றி படம் கொக்கி அதற்கு பிறகு அவர் நடித்த இரண்டு படங்களும் வெளியான தகவல்கள் மட்டுமே தெரிந்தன.சரி விமர்சனத்தை ஆரம்பிப்போம்.

இந்த திரைப்படன் தொடக்க காட்சி ஒரு சாலையோர தள்ளு வண்டி உணவகத்தில் ஒரு சிறுவனுடன் ஆரம்பமாகிறது.உணவு தீர்ந்து போகும் நிலையில் உள்ளதால் கடையில் இருந்த சிறுவன் யாரையோ அழைக்கிறான் அவன் அழைத்த அந்த நபர் ஏதோ முக்கிய மான விஷயத்தை போர்வைக்குள் புகுந்து கொண்டு செய்கிறார்.பிறகு எழுந்து வந்து அப்படியே இட்லி மாவுக்குள் கையை விட வறுகிறார் இடையே ஒரு கை வந்து அந்த கையை தடுக்கிறது.அது தான் கதா நாயகனின் கை.கரனின் அறிமுக காட்சி அதுதான்.ஆனாலும் தான்பிறகு ஒரு சில நல்ல விஷயங்கள் கூறப்படுகிறது.கரண் ஒரு கால் டாக்சி டிரைவர் உணவகத்தில் அறிவுரை கூறிவிட்டு இடிலியையும் சாப்பிட்டு விட்டு அவருடைய டாக்சியில் பயணம் செய்யும் ஞான சம்பந்தத்துடன் (ஞான சம்பந்தம் காலையில தொலைக்காட்சில வந்து கருத்து சொல்லுவார அவருதான் ) புறப்பட்டு செல்கிறார்.நடுவில் ஒரு தொலைபேசி அழைப்பு கரனுக்கு வருகிறது "சிரித்த்துக்கொண்டே தம்பி நான் அம்மா பேசுறேன் " இது தான் அந்த அழைப்பின் ரிங்டோன் குரல் மட்டும் தான் கோவை சரளா போல் கேட்கிறது யார் என்று பின்னால் காட்டுவார்கள் நாம் படத்துடன் பயணிப்போம் என்று பயணத்தை துவக்கினோம்.அந்த தொலைபேசியில் 33 தடவையாக பெண் பார்க்கபோவதை ஞயாபகபடுத்து கிறார் கரனின் அம்மா.சில கருத்துக்களை கூறி விட்டு நான் இறங்கும் இடம் வந்தது என்று இறங்கி விடுகிறார் ஞான சம்பந்தன்.நான் என் இவ்வளவு நீளமாக இந்த காட்சிகளை எழுதினேன் என்றால் இந்த திரைப்படத்திலேயே இது தான் மிக நீளமான கத்திரி வைக்கப் பட்டு இருக்க வேண்டிய காட்சி.இதன் பிறகு கதை சற்று வேகம் எடுக்கிறது.

அங் இருந்து கிளம்பிய கரண் ஒரு பெண்ணையும் ஆவலுடன் ஒரு ஆணையும் கல்யாணதிற்கு அணிந்திருக்கும் ஆடைகளுடன் பார்க்கிறார். அவர்களை துரத்தி வந்த கும்பல் அந்த வாலிபனை சுட்டு விடுகிறார்கள் பின்னர் அந்த பெண் கரனிடம் உதவி கேட்டு அவர் டாக்ஸியில் ஏறிவிடுகிறார்.எரிய அந்த பெண் தான் திரைப்படத்தின் நாயகி அவர் ஏன் இப்படி துரத்தப்படுகிறார் என்ற கதையை கரனிடம் கூறுகிறார்.அவரை ஒருவர் காதலித்ததாகவும் அதற்கு அவர் அண்ணன் ஆதரவு தந்ததாகவும் ஆனால் அப்பா எதிர்ப்பு தெரிவித்ததாகவும் அதனால் தான் இப்படி துரத்துகிறார்கள் என்று கூறுகிறார்.நாயகியின் மேல் நாயகனுக்கு தொடக்கத்தில் இருந்தே ஒரு மோகம் இருந்தது அதனால் அவர் என்ன சொன்னாலும் கேட்டுக்கொள்கிறார்.அதற்கு பின் ஒரு இடத்தில் நாயகியின் அன்னான் வர சொல்ல இவர்கள் செல்வதற்குள் நாயகியின் தந்தை அவரை கொன்று விடுகிறார் .இப்பொழுதும் நாயகியை காப்பாற்றும் எண்ணத்தோடு அவரை அழைத்து கொண்டு வேகமாக டாக்ஸியில் செல்கிறார்.அப்பொழுது போலீஸ் பின் தொடர்கிறது நடந்ததை எல்லாம் போலீசிடம் கூறிவிட்டு உன் தந்தையை மாற்றிவிடலாம் என கூறிய கரணை நீ தள்ளிப்போ பொடியா என கரணை தள்ளிவிட்டு டாக்ஸியை வேகமாக ஓட்டிச்செல்கிறார் அதுமட்டுமல்லாமல் துப்பாக்கியை வைத்து போலிஸ் வண்டியையும் சுடுகிறார்.தப்பிக்க முற்படும் பொழுது அவரையும் சுட்டுவிடுகிறார்கள் இம்முறை சுட்டது போலீஸ் அத்துடன் முதல் பாதி முடிவடைகிறது.

இரண்டாவது பாதியில் டாக்சி இவருடையது என்பதால் இவரை கைது செய்கிறார்கள் கொலை செய்யப்பட்ட அந்த பெண்ணின் அண்ணன் அவளின் உண்மையான அண்ணன் இல்லையென்றும் கொலைசெய்த நாயகியின் தந்தை அவருடைய உண்மையான தந்தை இல்லை என்றும் கரனுக்கு தெரிய வருகிறது.பிறகு நகைச்சுவை கலந்த ஏகப்பட்ட ட்விஸ்ட்டுகள் ஒரு சில காட்சிகள் யதார்த்தத்தை மீறி இருந்தாலும் கரனின் இயல்பான நடிப்பு அதை சரி செய்து விடுகிறது.சண்டை காட்சிகளை நீங்கள் கண்டிப்பாக திரை அரங்குக்கு சென்று பார்க்கலாம் மிக அழகாக ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்கள்.

இந்த திரைப்படத்தை மசாலா படம் என்றே கூற முடியும்.நல்ல அருமையான திரைக்கதை இதனை மிக யதார்த்தமாக எடுத்து இருந்தால் கரனுக்கு இது இன்னொரு வெற்றி படமாகவும் தமிழ் சினிமாவில் நாயகனாக ஒரு ரீ என்ட்ரி படமாகவும் அமைந்து இருக்கும்.

காதல் கோட்டை படத்தில் தல அஜித்தை விட நன்றாக நடித்திருந்தது நீங்கள்தான் என்று திரைப்படம் பார்த்துவிட்டு வெளியேவந்த எனது நபர்கள் கூறீனார்கள் நானும் அதை சில காட்சிகளில் உணர்ந்தேன்.அவ்வளவு திறமையும் உள்ள உங்களுக்கு ஏன் இன்னும் ஒரு பெரிய திருப்புமுனை அமையவில்லை என்று தெரியவில்லை.

மீண்டும் முயற்சி செய்யுங்கள் கரண்.அடுத்த படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்.




கமலின் அடுத்த மலையாள ரீமேக் படம்

By With No comments:
நடிகர் கமலஹாசன் சமீப காலமாக கமர்ஷியல் படங்களில் நடிக்கவே விருப்பம் காட்டுகிறார்.சில ஆண்டுகளுக்கு முன்பு கிரேஸி மோகனின் வசனங்களை கொண்டு காமெடி படங்களை உருவாக்கி வந்தார் ஆனால் வெளியாகிய காமெடி திரைப்படங்கள் யாவும் அவருக்கு ரீமேக் படங்கள் அளவுக்கு வெற்றியை தரவில்லை உதாரணமாக வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்,பாபநாசம் அவர் சமீபத்தில் நடித்து வெளிவந்த தூங்கா வனம் (ஆங்கில படத்தின் தழுவல்) உட்பட பல படங்களை கூறலாம்.சமீபத்தில் வெளியான உத்தம வில்லன் அவரின் நடிப்பு திறமையை உணரச்செய்யும் வகையில் இருந்தாலும் மக்களிடம் கிடைத்த வரவேற்பு மற்றும் வசூல் விஷயத்தில் ரீமேக் படங்களை காட்டிலும் கொஞ்சம் குறைவு தான்.அதனால் அடுத்து ஒரு மலையாள திரைப்படத்தை ரீமேக் செய்து நடிக்க கமலஹாசன் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன ஆனால் அது அதிகாரபூர்வமானதாக தெரியவில்லை.

அது எந்த மலையாள படமாக இருக்கும் என்று கேட்பவர்களுக்கு பதில் மோகன்லால் மலையாளத்தில் நடித்த திரிஷ்யம் படத்தை தமிழில் பாபநாசம் என்று தலைப்பிட்டு கமல் நடித்த திரைப்படம் மா பெரும் வெற்றியை பெற்றது.அதனால் தற்போது மோகன்லால் நடிப்பில் வெளிவந்து வெற்றிநடை போட்டு கொண்டு இருக்கு திரைப்படமான ஒப்பம் படத்தை ரீமேக் செய்ய வாய்ப்பு அதிகமாக உள்ளதாக தெரிகிறது.ஒப்பம் திரைப்படத்தில் மோகன்லால் பார்வையற்றவேர் வேடத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Sunday, September 18, 2016

கவர்ச்சிக்கு பயப்படாத கபாலி நாயகி

By With No comments:
நடிகை ராதிகா அப்தே கபாலி திரைப்படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடித்தவர்.கபாலிக்கு முன்பே இவரின் கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதன்  மூலம் மிக பிரபலமாகிவிட்டார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பர்சித் என்ற திரைப்படத்தில் இவர் மிக கவர்ச்சியாக நடித்த புகைப்படங்கள் வெளியாகின.ஊடக நண்பர் ஒருவரால் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது அதற்கு அவர் கவர்ச்சியாக நடிப்பதற்கு எனக்கு எந்த பயமும் இல்லை ,நான் பல இடங்களில் பயணம் செய்துள்ளேன்.இந்தியாவிலும் ,வெளிநாடுகளிலும் பலர் நிர்வாணமாக மேடையில் தோன்றுவதை நான் பார்த்து உள்ளேன்.நான் வேலைக்காக உழைக்கிறேன்.படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறேன் மற்றபடி இது போன்ற விஷயங்களை பற்றி எல்லாம் நான் கவலைப்பட மாட்டேன் என்று கூறிவிட்டாராம்.

இந்த எண்ணம் இறுதிவரை இருந்தால் நன்று .

Thursday, September 8, 2016

இயக்குனர் பாலாவை கவர்ந்த சூப்பர் சிங்கர் நாயகி

By With No comments:
இயக்குனர் பாலா அடுத்த திரைப்படம் எடுக்க போவதாக அறிவித்து விட்டாலே.ரசிகர் மனதில் உள்ள முதல் கேள்வி நாயகி யார் ?  ஏனென்றால் ஒவ்வொரு பாலா திரைப்படத்திலும் கதாநாயகனின் பாத்திரத்துக்கு இணையான அளவு கதாநாயகிகளுக்கும் முக்கியத்துவம் வழங்குவார்.இன்னும் இவரது ஒரு சில படங்களில் கதாநாயகிகள் தங்களின் சிறப்பான நடிப்பால் கதாநாயகனையே பின்னுக்கு தள்ளி விடுவார்கள்.அந்த அளவுக்கு பாலா தன பட நாயகிகளின் கதாபாத்திரத்துக்கு உயிரூட்டி இருப்பார்.அதனாலேயே இவர் படத்தில் நடிப்பது கடினம் என்றாலும் எப்படியாவது நடித்து விட வேண்டும் என்று பல நாயகிகளுக்கு ஆசையும் உள்ளது.

இந்நிலையில் இயக்குனர் பாலாவின் அடுத்த படத்தில் நடிக்க விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி பின்னர் தனக்கென தனி ரசிகர்களை கொண்டிருக்கும் பிரகதிக்கு திரைப்படத்தின் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு அளிக்க பட்டு உள்ளதாக தகவல்.மேலும் சாட்டை என்ற திரைப்படத்தில் நடித்த யுவன் அவருக்கு ஜோடியாக நடிக்கிறாராம்.

Sunday, August 21, 2016

ஆண்டிபட்டி கனவா காத்து:தர்மதுரை திரைப்பட பாடல் வரிகள்

By With 8 comments:
திரைப்படம் : தர்மதுரை(2016)
இசை : யுவன் சங்கர் ராஜா
------------------------------------------------------------------------------------------------

ஆண்டிபட்டி கனவா காத்து ஆல தூக்குதே
ஆய்த பொண்ணு என்ன தாக்குதே
அட முக்கா பொம்பளையே
என்ன முழுசா நம்பலயே
நான் உச்சந் தலையில் சத்தியம் செஞ்சும்
அச்சம் தீரலயே

உன் பவுசுக்கும் உன் பதவிக்கும்
வெள்ள காரி புடிப்ப
இந்த கிறுக்கிய ஏழ சிரிக்கிய
எதுக்காக புடிச்ச


வெள்ளக்காரி காசு தீந்தா
வெறுத்து ஓடி போவா
இவ வெள்ளரிக்கா வித்து கூட
வீடு காத்து வாழ்வா

தாலிக்கட்ட பண்ணிக்கிட்டோம் நிச்சயித்த
தள்ளி நில்லு மீறாத என் சத்தியத்த
கொஞ்சம் தொட்டா
குண்டர் சட்டம் பாயுமா
நண்டு சீண்டும் நரிதான் ஓயுமா

நீ மஞ்ச கருவேலம் பூவு
அதில் மாசு தூசு ஒன்னும் சேரல
ஒரு மஞ்ச தாலி கட்ட போறேன்
உன் மாராப்பு நான் தான் புள்ள.

மெய்யாகுமா வெப்ப எண்ணை நெய்யாகுமா
விண்மீனுக்கு தண்ணி மேல சந்தேகமா
ஏழ பொண்ணு ஏமாந்து தான் போகுமா
என்ன எழுதி தாரேன் போதுமா

ஊரில் உள்ள ஆள எல்லாம்
அண்ணன் அண்ணன் சொல்லி கூப்புட்டேன்
உன்ன உன்ன மட்டும் தானே
இப்ப மாமானு நான் கூப்புட்டேன்


ஆண்டிபட்டி கனவா காத்து ஆல தூக்குதே
ஆய்த பொண்ணு என்ன தாக்குதே
அட முக்கா பொம்பளையே
என்ன முழுசா நம்பலயே
நான் உச்சந் தலையில் சத்தியம் செஞ்சும்
அச்சம் தீரலயே

உன் பவுசுக்கும் உன் பதவிக்கும்
வெள்ள காரி புடிப்ப
இந்த கிறுக்கிய ஏழ சிரிக்கிய
எதுக்காக புடிச்ச

வெள்ளக்காரி காசு தீந்தா
வெறுத்து ஓடி போவா
இவ வெள்ளரிக்கா வித்து கூட
வீடு காத்து வாழ்வா
ஆண்டிபட்டி கனவா காத்து ஆல தூக்குதே
ஆய்த பொண்ணு என்ன தாக்குதே

Monday, August 1, 2016

கபாலியும் எதிர்மறை விமர்சனங்களும்

By With No comments:
இந்த தலைப்பில் நான் எழுத தொடங்குவதற்கு முன்னரே கூறிவிடுகிறேன் நான் ஒரு கமல் ரசிகன்.

கடந்த வாரம் இந்திய திரை ரசிகர்களின் ஏகோபித்த  எதிர்பார்ப்புடன் வெளிவந்த திரைப்படம்  கபாலி .இந்த திரைப்படம் திரையிடப்பட்ட நாள் முதலே விமர்சனங்களுக்கு பஞ்சமில்லை.ஒரு திரைப்படம் வெளிவந்து இத்தனை நாட்களுக்கு பிறகும் இவ்வளவு பரபரப்பா ஏன் விமர்சனங்கள் சமூக ஊடகங்களில் எழுதப்பட்டு வருகிறது ? இதற்கு ஒரே ஒரு பதில் தான் இது சூப்பர் ஸ்டார் நடித்த திரைப்படம்.இதில் இந்த திரைப்படம் திரைக்கு வந்த  நாளிலேயே இதன் நகல் இணையத்தில் வெளியானதாக ஒரு செய்தி கசிந்தது.ஒரு வேலை அதனை பார்த்து விட்டு தான் இப்படி எதிர் மறையாக விமர்சனம் செய்கிறார்களோ என்ற கேள்வி எனக்கு எழுகிறது.சமீப காலங்களில் சமூக ஊடகளில் அதிக மாக வெளியிடப் பட்ட எதிர்மறை விமர்சனங்களால் தோல்வி அடைந்த திரைப்படங்கள் அதிகம்.ஆனால் கபாலி அந்த வரிசையில் வரவில்லை.

 சூப்பர் ஸ்டார் படங்களில்  எனக்கு தெரிந்த வரையில் சமீப காலத்தில் இதைப்போன்று திட்ட திட்ட ஐம்பது சதவிகிதம் நேர்மறை மற்றும் எதிர்மறை கருத்துக்கள் நிலவியதே கிடையாது ஒன்று அது ரசிகர்களில் பேராதரவுடன் மாபெரும் வெற்றி படமாக இருக்கும் இல்லையேல் அதை ஒரு வெற்றி படம் என்று கூற முடியாத அளவுக்கு இருக்கும்.இதைப்போன்று சம அளவு எதிர்மறை மற்றும் நேர்மறை கருத்துக்கள் கமல் படத்துக்கு தான் அதிகமாக இருக்கும் உதாரணத்திற்கு பல படங்கள் உண்டு அவைகள் எல்லாம் சில நாட்களுக்கு பிறகு சிறந்த திரைப்படம் என அனைவராலும் பாராட்டப்பட்டது.ஒரு வேலை அப்படி தான் ரஜினிக்கு இந்த திரைப்படம் இருக்குமோ ?

இந்த திரைப்படம் பல புதிய விமர்சகர்களையும் உருவாக்கி உள்ளது என்பதை உணர்கிறேன்.பல்வேறு எதிர்மறை விமர்சனங்களையும் மீறி கபாலிரூபத்தில் சூப்பர் ஸ்டார் ஸ்டைலாக வெற்றி நடை போட்டுக் கொண்டு இருக்கிறார்.

Monday, May 16, 2016

அரசுக்கு ஐடியா குடுத்த நடிகர் விஷால்

By With No comments:
சமீப காலமாக அதுவும் குறிப்பாக நட்சத்திர கிரிக்கெட் விவாகரத்துக்கு பிறகு சமூக ஊடகங்களில் நடிகர் விஷாலை பல தரப்பினரும் கழுவி கழுவி ஊத்தி வருகின்றனர் குறிப்பாக தல Fans.இந்த  நேற்று தனது தொகுதியில் வாக்களிக்க வந்த விஷால் தேர்தல் நேரத்தில் விதிமுறைகளை மீறி  எடுத்து செல்லப்பட்டு பிடிபட்ட பணத்தினை கல்விக்காக பயன்படுத்த வேண்டும் என்று பத்திரிக்கையாளர்களிடம் கூரியிருக்கிரார்.